முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நயினை நாகபூசணி அம்மனுக்கு இன்று கொடியேற்றம்

நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உயர்திருவிழாவானது இன்று(26.06.2025) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி எதிர்வரும் 11.07.2025ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

இவ் உயர் திருவிழா தொடர்பாக அரசாங்க அதிபர் தலைமையில் 17.06.2025 ஆந் திகதி
மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற முன்னாயத்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்ட
பின்வரும் விடயங்களை யாழ்ப்பாணம் மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன்
பொதுமக்களின் நலனுக்காக வெளியிட்டுள்ளார்.

நடைமுறையினை கடைப்பிடிக்காதவர்கள்

அதில் போக்குவரத்திற்காக குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து படகுச் சேவையானது 26.06.2025 ஆந் திகதி
தொடக்கம் 11.07.2025 ஆந் திகதி வரை மு.ப 6.00 மணி தொடக்கம் பி.ப 6.00 மணி வரை
அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை என்ற அடிப்படையில் சேவையில் ஈடுபடும்.

நயினை நாகபூசணி அம்மனுக்கு இன்று கொடியேற்றம் | Nainadhivu Nagapoosani Amman Temple Festival

இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்தானது யாழ்ப்பாண பேருந்து
தரிப்பிடத்திலிருந்து மு.ப 5.30 மணி தொடக்கம் இறுதி படகுச் சேவைக்கமைய
சேவையில் ஈடுபடுவதுடன், அரை மணித்தியாலத்திற்கு ஒரு தடவை என்ற அடிப்படையிலும்
சேவையில் ஈடுபடும்.

திருவிழா காலங்களில் பேருந்தானது மு.ப 4.30 மணிக்கு யாழ்ப்பாண பேருந்து
தரிப்பிடத்திலிருந்து புறப்படும். அத்துடன் இரவு பேருந்து சேவையானது படகுச்
சேவைக்கமைய சேவையில் ஈடுபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறிகட்டுவான் இறங்குதுறை பகுதியிலும் அதற்கு முன்னான வீதி ஓரங்களிலும்
வாகனங்கள் தரிப்பது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

வாகனங்கள் அடியார்கள்
மற்றும் பொதுமக்களை இறக்கிவிட்டு வாகனங்களுக்கென ஒதுக்கப்பட்ட தரிப்பிடத்தில்
தரிக்கப்படவேண்டும். இந் நடைமுறையினை கடைப்பிடிக்காதவர்கள் மீது பொலிஸாரால்
நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலதிக தகவல் – கஜிந்தன்

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.