முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

தேசிய மட்ட அழகியல் போட்டியில் புறந்தள்ளப்படும் தமிழ் மாணவர்கள்

தேசிய மட்ட அழகியல் தொடர்பான இந்த வருடத்துக்கான போட்டிகள் சிங்கள மொழி
மாணவர்களுக்கு சுற்று நிருபம் வெளியிடப்பட்டு நடனப்போட்டிகள் தேசிய மட்டத்தில்
இடம்பெற்று முடிவுற்றுள்ளது.

இருப்பினும், தமிழ் மொழி மாணவர்களுக்கு இதுவரை சுற்று
நிருபம் வெளியிடப்படமால் தமிழ் மொழி மாணவர்களுக்கு பாரிய அநீதி
இடம்பெற்றுள்ளதாக பெற்றோர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தேசிய மட்ட அழகியல் தொடர்பான போட்டிகள் கடந்த பல வருடங்களாக இலங்கையில்
மாணவர்களின் அழகியல் மேம்பாட்டினை இலக்காக கொண்டு களம் அமைத்துக் கொடுக்கின்ற
ஒரு போட்டி நிகழ்வாக நடைபெற்று வந்தது.

இந்த போட்டி பல வருடங்களாக சிங்கள மொழி மூலமாக தேசிய மட்டத்தில் பல
நிகழ்ச்சிகளை கொண்டு சிங்கள மாணவர்களுக்கு நடைபெற்று வந்தது இது அவர்களுக்கு
ஒரு வரப்பிரசாதமாக அமைந்திருந்தது.

இருந்த போதும் கடந்த சில வருடங்களாக தமிழ்மொழியில் இந்த போட்டிகள் நடைபெற்றது
வந்தது.

இந்த போட்டிகளில் பங்கு பற்றும் மாணவர்களின் மாகாண மட்டம் மற்றும்
தேசிய மட்டங்களின் பெறுபேறுகள் பல்கலைக்கழக அனுமதியின் போது அவர்களுக்கு
துணைபுரிந்து ஏதே ஒருவகையில் பல்கலைகழக அனுமதியில் செல்வாக்கை செலுத்த
மாணவர்களுக்கு ஒரு சுபீட்சமான ஒரு பாதையை இட்டுச் சென்று பெரும்
பங்காற்றியுள்ளமை மறுக்க முடியாத ஒன்று.

அந்த வகையில் கடந்த மூன்று வருடங்களாக இந்த தேசிய மட்ட அழகியல் போட்டியானது தமிழ்
மொழி மாணவர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட பல நிகழ்சிகளை கொண்டதாக
ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது.

இருப்பினும், இந்த போட்டிகளானது 2025 ஆம் ஆண்டு
ஒகஸ்ட் மாதமாகியும் தமிழ் மொழியில் சுற்று நிருபங்கள் இதுவரை
வெளியிடப்படவில்லை.

இருப்பினும், சிங்கள மொழி மாணவர்களுக்கு கடந்த பெப்ரவரியில் சுற்று
நிருபம் வெளியிடப்பட்டு நடனப்போட்டி தேசிய மட்டத்தில் இடம்பெற்று
முடிவுற்றுள்ளது.

இந்த வருடம் முடிவடைய மூன்று மாதங்கள் மீதமாக இருக்கின்றது ஆனால் நவம்பர்
மாதத்துக்கு இடையில் போட்டிகள் யாவும் நடைபெற்று முடிக்கப்பட வேண்டும்.

ஆனால், இன்னும் தமிழ் மொழி மாணவர்களுக்கு சுற்று நிருபம் கூட வெளியிடப்படாதலால்
போட்டிகள் நடைபெறாது இருக்கின்றது.

இதனால் இந்த வருடத்தில் இருக்கின்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக அனுமதியில்
பாரிய தாக்கம் ஏற்படுவதுடன் மாணவர்களுக்கான வாய்ப்பை இழக்க செய்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இவ்வாறு தமிழ் மொழி மாணவர்களுக்கு பாரிய அநீதி ஏற்பட்டுள்ளது என பெற்றோர்கள்
கடும் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த போட்டிகளை கல்வி அமைச்சு ஏன் தமிழ் மொழி மாணவர்களுக்கு இதுவரை நடத்தாமல்
இருக்கின்றது என்பது ஒரு கேள்விகுறியாகும்.

எனவே, இந்த போட்டிகளை உடனடியாக
அரசாங்கம் நடாத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என பெற்றோர்கள்
கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் கந்தசுவாமி கோவில் 13 ஆம் நாள் மாலை திருவிழா

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.