அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் களுதாவளை மகா வித்தியாலய மாணவன் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
குகன் பகிர்ஜன் என்ற மாணவன் 16 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தல் போட்டியில் கலந்து கொண்டு முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவருடன் போட்டியிட்ட ஏனைய மாணவர்களை வீழ்த்தி 1.98 மீற்றர் உயரம் பாய்ந்து இலங்கையில் பாடசாலைகளுக்கிடையிலான மெய்வல்லுனர் போட்டியில் புதிய சாதனையைப் படைத்துள்ளார்.
தங்கப் பதக்கம் வென்ற மாணவன்
இதேவேளை, அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 38 ஆவது தேசிய மட்ட மெய்வல்லுநர் போட்டியில் மன்னார் முருங்கன் மத்திய மகா வித்தியாலய மாணவன் கமில்டன் தங்கம் பதக்கத்தை கைப்பற்றியுள்ளார்.
ஆண்களுக்கான நீளம் பாய்தல் போட்டியில் குறித்த தங்கப் பதக்கத்தை கைபற்றி அவர் சாதனை படைத்துள்ளார்.
இப்போட்டிகள் இன்று(12) தியகம மஹிந்த ராஜபக்ஸ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.