முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மட்டக்களப்பு கலங்கரை கோபுரத்திற்கு புதிய மின் விளக்கு வழங்க நடவடிக்கை

மட்டக்களப்பு (Batticaloa) கலங்கரை கோபுரத்திற்கு புதிய மின்
விளக்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் (Ramalingam Chandrasekar) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு கடற்றொழில் திணைக்களத்திற்கு இன்று (27) அமைச்சர் விஜயம்
ஒன்றை மேற்கொண்டிருந்த போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கடற்றொழில் சமூகம்
எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடலிலும் அமைச்சர் ஈடுபட்டார்.

சட்ட நடவடிக்கை

இதன்போது, இறங்குதுறை அமைத்தல், களப்பு மற்றும் ஆற்றை ஆழப்படுத்தல்,
சட்டவிரோத கடற்றொழில் வலைகளை தடுத்தல் போன்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு கலங்கரை கோபுரத்திற்கு புதிய மின் விளக்கு வழங்க நடவடிக்கை | New Electric Lights To Batticaloa Lighthouse Tower

மேலும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய கடற்றொழில் வசதிகளை மேம்படுத்தல், உயர்
தரத்திலான வலைகளை அறிமுகம் செய்தல், கடலுக்கு செல்லும் கடற்றொழிலாளர்களுக்க கவீனம்
ஏற்படும் போது அவர்களை மீட்பதற்கான விசைப்படகின் தேவை போன்றன கடற்றொழிலாளர்களினால்
இங்கு வலியுறுத்தப்பட்டன.

இதன் போது கருத்து தெரிவித்த அமைச்சர் சட்ட விரோத கடற்றொழிலை தடுத்து கடலையும், கடல் வளத்தையும் பாதுகாப்பிற்கு தேவையான சட்ட நடவடிக்கை மேற்கொள்வதாக
தெரிவித்தார்.

இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்கள உதவிப்
பணிப்பாளர் ருக்சான் குருஸ், கடற்றொழில் சங்க தலைவர்கள், கடற்றொழிலாளர்கள் என பலர்
கலந்து கொண்டனர்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்