முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

திருச்சி – யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை: வெளியான மகிழ்ச்சி தகவல்

திருச்சி(Tiruchi)  விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம்(Jaffna) விமான நிலையத்திற்கு புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக இண்டிகோ(IndiGo) நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, எதிர்வரும் மார்ச் மாதம் முதல் இந்த புதிய விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருச்சி விமான நிலையத்திலிருந்து கொழும்பிற்கு தினமும் 2 முறை விமானம் இயக்கப்பட்டு வருகிறது.

புதிய விமான சேவை

குறித்த விமான சேவையை வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் பயன்படுத்தி வருகின்ற நிலையில் இந்த சேவைக்கு அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், திருச்சி விமான நிலையத்திலிருந்து யாழ்ப்பாணம் விமான நிலையத்திற்கு எதிர்வரும் மார்ச் மாதம் முதல் புதிய விமான சேவையை இண்டிகோ நிறுவனம் தொடங்க உள்ளது.

திருச்சி - யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை: வெளியான மகிழ்ச்சி தகவல் | New Flight Service Starts From Tiruchi To Jaffna

இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்பவர்கள் மிக எளிதாக, குறைந்த கட்டணத்தில் செல்வதற்கு ஏதுவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இலங்கைக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கும் எளிதாக இருக்கும் என்று வியாபாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.

விமான நேர அட்டவணை

அந்தவகையில், மதியம் 12.55 மணிக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அந்த விமானம் 1.55 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தை சென்றடையும் என கூறப்படுகின்றது.

திருச்சி - யாழ்ப்பாணம் இடையே புதிய விமான சேவை: வெளியான மகிழ்ச்சி தகவல் | New Flight Service Starts From Tiruchi To Jaffna

அத்துடன், மீண்டும் இந்த விமானம் மதியம் 2.55 மணிக்கு யாழ் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு மாலை 3.50 மணிக்கு திருச்சி விமான நிலையம்சென்றடையும் என தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்