அருண விதானகமகே எனப்படும் கஜ்ஜாவின் கொலையில் தொடர்புடைய சந்தேக நபர்களுடன் சம்பத் மனம்பேரிக்கு நெருங்கிய தொடர்பு இருப்பது விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பத் மனம்பேரியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், மித்தெனிய போதைப்பொருள் ரசாயனங்களை மறைத்து வைத்தது தொடர்பான கூடுதல் தகவல்களைக் கண்டறிய முடிந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கஜ்ஜாவைக் கொலை செய்யத் திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட பெக்கோ சமனும், அவரது உள்ளூர் குற்றவியல் வலையமைப்புடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் சம்பத் மனம்பேரியும் தற்போது மேற்கு வடக்கு குற்றப்பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
கொலையாளிகளுடான உறவு
சந்தேக நபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், போதைப்பொருள் கடத்தல் மற்றும் சந்தேக நபர்கள் செய்த குற்றங்கள் குறித்து விசாரணை அதிகாரிகள் இதுவரை பல உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
சம்பத் மனம்பேரியிடம் மேலும் நடத்தப்பட்ட விசாரணையில், கஜ்ஜா மற்றும் அவரது இரண்டு குழந்தைகளைக் கொன்றதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபர்களுடன் சம்பத் மனம்பேரிக்கு நெருங்கிய தொடர்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.
கஜ்ஜாவின் கொலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நம்பப்படும் ரோஷனும், சம்பத் மனம்பேரியும் நெருங்கிய நண்பர்கள் எனவும் அவர் மனம்பேரியின் தனிப்பட்ட விவகாரங்களில் கூட நெருக்கமாகப் பணியாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தாஜுதீன் கொலை
அத்துடன், கஜ்ஜாவை கொலை செய்வதற்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் ஜீவன் என்ற சந்தேகநபர், சம்பத் மனம்பேரிக்குச் சொந்தமான பேருந்தில் ஒரு காலத்தில் பணிபுரிந்தவர் என்பது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கஜ்ஜாவைக் கொல்லப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பெக்கோ சமனுக்குச் சொந்தமான துப்பாக்கியை, கொலைக்கு சில நாட்களுக்கு முன்பு சம்பத் மனம்பேரி ஒருவருக்குக் கொடுத்திருந்ததும் முன்னதாக கண்டறியப்பட்டது.
இவ்வாறானதொரு பின்னணியில், இலங்கையின் பிரபல ரக்பி வீரர் தாஜுதீன் கொலையில் கஜ்ஜா தொடர்பு பட்டுள்ளதாக காவல்துறையினர் உறுதிபடுத்தியுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து பல கோணங்களில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.