குற்றவியல் வழக்குகளை சுயாதீனமாக கையாள பொது வழக்கு விசாரணை பணியகம் ஒன்றை
அமைக்கும் அரசின் திட்டம் குறித்து தனது கருத்தை சமர்ப்பிக்க சட்டமா அதிபர்
திணைக்கள சட்ட அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.
குற்றவியல் வழக்குகளை, சட்டமா அதிபர் திணைக்களத்தில் மாற்றி புதிதாக
அமைக்கப்படும், பொது வழக்கு விசாரணை பணியகத்துக்கு மாற்றும் திட்டம்
குறித்து சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளின் கருத்துகளும் இந்தக் கருத்தில்
அடங்கவுள்ளன.
முன்வைக்கப்பட்ட யோசனை
பொது வழக்கு விசாரணை பணியகம் அமைப்பது அரசாங்கத்தின் கொள்கை முடிவு என்பதால்,
அதற்கான அளவுகோல்களை உருவாக்கும் பணியில் உள்ள குழுவிடம் தங்கள் முன்மொழிவை
முன்வைக்கவுள்ளதாக, சட்டமா அதிபர் திணைக்கள சட்ட அதிகாரிகள் சங்கம்
தெரிவித்துள்ளது.
சட்டமா அதிபர் திணைக்கள சட்ட அதிகாரிகள் சங்க நிர்வாகக் குழு, கடந்த
வெள்ளிக்கிழமை கூடியபோது இந்த விஷயம் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, 2 மில்லியன் மக்கள் தொகை கொண்ட சிங்கப்பூரில், அதன் சட்ட மா அதிபர்
துறையில், 820 அதிகாரிகள் உள்ளனர்.
எனினும் 22 மில்லியன் மக்களை கொண்ட இலங்கையின் சட்டமா துறையில் 320 அதிகாரிகள்
மட்டுமே உள்ளனர் என்பதை கூட்டத்தில் இருந்தவர்கள் சுட்டிக்காட்டினார். அத்துடன், துறையில் 80 காலியிடங்கள் குறித்தும் இதன்போது
சுட்டிக்காட்டப்பட்டது.