முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஜனாதிபதி சமிக்ஞை காட்ட வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

புதிய ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஒரு சமிக்ஞையை காட்டினால் மட்டுமே
உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால் கூற முடியும் என வவுனியா மாவட்ட
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தலைவி சி.ஜெனிற்றா
தெரிவித்துள்ளார்.

இன்று (28) அவரது இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இங்கு மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ளது. இறுதி யுத்தத்தின் போது
சிறுவர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் செல்வீச்சுக்களினாலும் விமான குண்டு
தாக்குதலாலும், உடல் சிதறியும், படுகொலை செய்யப்பட்டுள்ளனர் இதுவரை
இதற்கு நீதி கிடைக்கவில்லை.

சர்வதேச நீதிப்பொமுறை

மேலும் இறுதி யுத்தம் முடிவடைந்த நிலையில் குடும்பம் குடும்பமாக இடம்பெயரும்
போது தங்களது பிள்ளைகளை கையிலே ஒப்படைத்தனர். இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பள்ளி
மாணவர்களும் பச்சிளங்குழந்தைகளும் ஆயுதம் ஏந்தி போராடியவர்களா, இவர்களுக்கு
என்ன நடந்தது.

கடந்த எட்டு தசாப்த காலமாக பதவி வகித்த எட்டு ஜனாதிபதிகளிற்கே யுத்தத்தை
நடாத்திய பொறுப்பு இருக்கின்றது. இந்நிலையிலே கையில் ஒப்படைக்கப்பட்ட
உறவுகளுக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரியாமல் வீதியிலே போராடிக்
கொண்டிருக்கிறோம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஜனாதிபதி சமிக்ஞை காட்ட வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | New President Should Give Solution Missing Persons

ஆட்சியாளர்கள் மாறுகின்றார்கள், ஆட்சியும் மாறுகின்றது.
தற்போது மாற்றம் ஒன்று நிகழ்ந்துள்ளது என்றாலும் கூட அது எந்தவகையில் எமக்கான
மாற்றத்தை தரும் என்பது தெரியாது. சர்வதேச நீதி பொறிமுறைமையை மட்டுமே நாம் இன்று வரை நம்பியிருக்கின்றோம்.

குறிப்பாக உள்ளக முறையில் எந்தவித நம்பிக்கையும் இல்லாத காரணத்தினால் நாங்கள்
சர்வதேச நீதிப்பொமுறைக்காகவே இதுவரை போராடிக் கொண்டிருக்கின்றோம்.

கவனயீர்ப்பு போராட்டம்

300க்கு மேற்பட்ட தங்களது பிள்ளைகள் எங்கே என்று தெரியாமல்
போராடிக்கொண்டிருந்த தாய் தந்தையரை இழந்த நிலையிலும் அவர்களின்
ஏக்கத்திற்காகவும் நாம் தொடர்ச்சியாக போராடிக் கொண்டிருக்கின்றோம்.

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஜனாதிபதி சமிக்ஞை காட்ட வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | New President Should Give Solution Missing Persons

இலங்கையில் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாடுபவர்களிற்கு ஒரு வேண்டுகோளினை
விடுக்கின்றோம். எமது உறவுகள் எத்தனை பச்சிளங் குழந்தைகளையும், பாடசாலை
மாணவர்களையும் இழந்து அவர்கள் மீண்டும் வருவார்களா என்ற ஏக்கத்துடனும்
தவிப்புடனும் வாழ்ந்து வருகின்றனர்.

இவர்களை உங்கள் பிள்ளைகளாக நேசியுங்கள். எனவே சர்வதேச சிறுவர் தினமான ஒக்டோபர் 1ஆம் திகதி அன்று வடக்கு கிழக்கு தழுவிய
கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க உள்ளோம்.

அந்தவகையில் வவுனியா
மாவட்டத்தில் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக காலை 10.00 மணிக்கு குறித்த
போராட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். எனவே இப்போராட்டத்திற்கு அனைவரும்
ஒத்துழைக்க வேண்டும்.

இலங்கையின் ஜனாதிபதிகள்

இலங்கை அரசானது 75 வருடகாலமாக தமிழ் மக்களை ஏமாற்றி இருந்தது. பரம்பரை
பரம்பரையாக 08 ஜனாதிபதிகள் மாறி மாறி ஆட்சி செய்திருந்த நிலையிலே எங்களுக்கு
எந்தவித மாற்றங்களும் நிகழவில்லை.

எனவே எந்த நிலையிலும் எந்த ஒரு அரசையும்
நம்பவில்லை. காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக ஜனாதிபதியாக பதவியேற்க
முன்னர் குறிப்பிட்டிருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து ஜனாதிபதி சமிக்ஞை காட்ட வேண்டும் : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை | New President Should Give Solution Missing Persons

குறிப்பாக சர்வதேச பொறிமுறையின் ஊடாக உண்மைகளை கண்டறிந்து, குற்றவாளிகளுக்கு
தண்டனையை பெற்றுக் கொடுத்து மீள் நிகழாமையை உறுதிப்படுத்தும் நிலையில் புதிய
ஜனாதிபதியை பற்றி யோசிக்க முடியும்.

எந்த ஜனாதிபதி வந்தாலும் எமக்கான தீர்வு கிடைக்கப் பெற வேண்டும் என்பதையே
சர்வதேசத்திடம் கேட்டுக்கொள்கிறோம். எனவே புதிய ஜனாதிபதி ஏதாவது ஒரு
சமிக்கையை காட்டினால் மட்டுமே உண்மையான மாற்றத்தை கொண்டுவந்தார் என எங்களால்
கூற முடியும்“ என தெரிவித்தார்.

YOU MAY LIKE THIS

https://www.youtube.com/embed/KvZN7VnpGmw

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.