முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

மாமெத் – டோடோ உயிரினங்களை உயிர்ப்பிக்க தயாராகும் அமெரிக்க விஞ்ஞானிகள்

மாமெத் , டோடோ மற்றும் டாஸ்மேனிய புலி போன்ற அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்க கொலோசல் திட்டமிட்டுள்ளதாக கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

12,500 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன டைர் ஓநாய்களை மரபணு பொறியியல் மூலம் கொலோசல் விஞ்ஞானிகள் உயிர்ப்பித்தமை தற்போது சர்வதேச ரீதியில் பேசுபொருளாகியுள்ளது.

இந்நிலையில், மாமத், டோடோ மற்றும் டாஸ்மேனிய புலி போன்ற அழிந்துபோன உயிரினங்களையும் தாம் உயிர்ப்பிக்க தயாராக இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

டைர் ஓநாய்

இதன்படி தற்போது அந்த நிறுவனம் உயிர்ப்பித்துள்ள டைர் ஓநாய்களுக்கு ரோமுலஸ் மற்றும் ரெமுஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டெக்ஸாஸை தளமாகக் கொண்ட கொலோசல் பயோசயின்சஸ் நிறுவனம், பண்டைய டிஎன்ஏ, குளோனிங் மற்றும் மரபணு எடிட்டிங் ஆகியவற்றைப் பயன்படுத்தி இந்த சாதனையை படைத்துள்ளனர்.

Dire Wolf

கொலோசலின் இணை நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பென் லாம் வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

  ”எங்கள் குழு 12,000 ஆண்டுகள் பழமையான பல் மற்றும் 72,000 ஆண்டுகள் பழமையான மண்டை ஓட்டிலிருந்து டிஎன்ஏவை எடுத்து ஆரோக்கியமான இந்த ஓநாய் குட்டிகளை உருவாக்கியுள்ளது.

இது மிகவும் கொடூர குணம் கொண்டவை

இது மரபணு பொறியியலில் ஒரு மிகப்பெரிய மைல்கல்” எனத் தெரிவித்துள்ளார்.

10 அடி உயர வேலி

இந்த ஓநாய் குட்டிகள் தற்போது 10 அடி உயர வேலிகளால் சூழப்பட்ட, 2,000 ஏக்கர் கொண்ட இடத்தில் வாழ்கின்றன.

அங்கு அவை பாதுகாப்புப் பணியாளர்கள், ட்ரோன்கள் மற்றும் நேரடி கேமராவினால் தொடர் கண்காணிப்பில் உள்ளன.

Dire Wolf

டைர் ஓநாயைத் தொடர்ந்து மாமெத் , டோடோ மற்றும் டாஸ்மேனிய புலி போன்ற அழிந்துபோன உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்க கொலோசல் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.