முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

யாழில் காயமடைந்த இந்திய கடற்றொழிலாளர்களை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள்

காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கடற்றொழிலாளர்கள் இருவரையும், தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரில்
சென்று பார்வையிட்டுள்ளனர்.

கருணைநாதன், இளங்குமரன் மற்றும் ஜெயானந்தமூர்த்தி, றஜீவன் ஆகியோர் தனித்தனியாக
வைத்தியசாலைக்கு சென்று கடற்றொழிலாளர்களை பார்வையிட்டுள்ளனர்.

இதேவேளை, யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளியும் காயமடைந்த இந்திய கடற்றொழிலாளர்களை பார்வையிட்டுள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய கடற்றொழிலாளர்களை கைது செய்யும் போது இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில்
இருவர் காயமடைந்தனர்.

யாழில் காயமடைந்த இந்திய கடற்றொழிலாளர்களை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Npp Mps Visit Injured Indian Fishermen In Jaffna

காயமடைந்த இருவரும் இன்று (28) அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் 13 இந்திய கடற்றொழிலாளர்களுடன் படகொன்று அத்துமீறி
நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட போது  படகில் ஏறி அவர்களை கைது செய்ய கடற்படை வீரர்கள் முயற்சித்தனர்.

நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை

இதன்போது கடற்படை வீரரை ஏற்றிக்கொண்டு குறித்த படகு
தப்பிச்செல்ல முற்பட்ட போது ரோந்து படகில் சென்ற இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கி
பிரயோகத்தில்  இருவர் காயமடைந்தனர்.

யாழில் காயமடைந்த இந்திய கடற்றொழிலாளர்களை பார்வையிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் | Npp Mps Visit Injured Indian Fishermen In Jaffna

இதனையடுத்து, கைதான இந்திய கடற்றொழிலாளர்களை கடற்றொழில் நீரியல் வள திணைக்களம் பொறுப்பேற்க
மறுத்துள்ள நிலையில் பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், காயமடைந்த கடற்றொழிலாளர்களை இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி
பார்வையிட்டுள்ளதுடன் அவர்களை நாட்டிற்கு அனுப்புவதற்கான
நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Gallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்