தேசிய பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்குப் பட்டதாரிகளை
நியமிப்பதற்கான, நேர்முகப் பரீட்சைகளை எதிர்வரும் வாரங்களில் நடத்துவதற்கு
கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் தேசிய பாடசாலைகளில் நிலவும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில
மொழிமூல ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை நியமிக்க கல்வி
அமைச்சு தீர்மானித்துள்ளது.
பட்டதாரிகளை நியமிப்பதற்காக கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி போட்டிப்
பரீட்சையொன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கமைய
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் மே மாதம் 9ஆம் திகதி வரை கல்வி அமைச்சில்
ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சைகளை நடத்துவதற்கு கல்வி அமைச்சு
தீர்மானித்துள்ளது.
நேர்முகப் பரீட்சைக்கு தகுதியான விண்ணப்பதாரர்களின் பட்டியல் மற்றும்
அழைப்புக் கடிதம் என்பன கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..
உலகிலேயே மிகப்பெரிய இரத்தினக்கல் இலங்கையில் கண்டுபிடிப்பு : 15000 கோடி ரூபா பெறுமதி
நாடாளுமன்றத்தின் புதிய உறுப்பினராக எம்.ஜி. வீரசேன கமகே தெரிவு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |