சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) வெளியிட்டுள்ள சமீபத்திய ஒருநாள் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா(Maheesh Theekshana) முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
அண்மையில் முடிவடைந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மகேஷ் தனது சிறப்பான ஆட்டத்தின் காரணமாக இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
பின் தள்ளப்பட்ட ஆப்கான் வீரர்
மகேஷின் வருகையால், தரவரிசையில் முன்னிலை வகித்த ஆப்கானிஸ்தான் வீரர் ரஷீத் கான்(Rashid Khan,) இரண்டாவது இடத்திற்கு பின்தள்ளப்பட்டார்.
மகேஷ் ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தை எட்டுவது இதுவே முதல் முறையாகும்.