புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இளங்கோபுரம் பகுதியில்
சட்டவிரோத கட்டுத்துவக்கு துப்பாக்கிகளை வைத்திருந்த சந்தேகத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.
நீதிமன்றில் முன்னிலை
இளங்கோபுரம் – தேராவில் விசுவமடு முகவரியைகொண்ட 25 அகவையடைய ஒருவர் அவரது
வீட்டில் கட்டுக்குழல் துப்பாக்கிகள் 6 வைத்திருந்த குற்றச்சாட்டில்
கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின் போது இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபரையும் சான்று பொருட்களையும் நீதிமன்றில்
முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

