அம்பாறை, அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று, பதூர் நகர்
பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய அந்தப்
பிரதேசத்துக்குச் சென்ற பொலிஸார் சந்தேகநபரைக் கைது செய்துள்ளதுடன்
அவரிடமிருந்த கேரள கஞ்சாவையும் கைப்பற்றியள்ளனர்.
மேலதிக விசாரணை
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அக்கரைப்பற்று நீதிவான்
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது எதிர்வரும் 31ஆம் திகதி வரை அவரை
விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

