யாழ்ப்பாணத்தில் கத்திக் குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த அற்புதராசா அகிலன் (வயது 46)
என்பவரே உயிரிழந்துள்ளார்.
யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதி
குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்ட நபரை பிடிக்க முயன்ற இரு
பெண்கள் உள்ளிட்ட நால்வர் காயமடைந்த நிலையில் , யாழ் . போதனா வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

