இங்கிலாந்தில்(england) உள்ள பாகிஸ்தான்(pakistan) தூதரக அதிகாரி, ஆர்ப்பாட்டம் நடத்திய இந்தியர்களை பார்த்து கழுத்தை அறுத்துவிடுவேன் என சைகை மொழியில் அச்சுறுத்திய காணொளி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு காஷ்மீர்(jammu kashmir) மாநிலத்தின் பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வருகிறது.
கழுத்தை அறுத்து விடுவேன்
இந்த தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து இங்கிலாந்தில் உள்ள லண்டனில் பாகிஸ்தான் தூதரகம் முன்பாக இந்தியர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
#BREAKING: Pakistan Army Defence Attache in London gestures towards Indian protestors to slit their throat publicly. This is Colonel Taimur Rahat of Pakistan Army, Air and Army Attache at Pakistan’s Mission in UK. No difference between a thug illiterate terrorist at this coward. pic.twitter.com/eZdRxqBN4q
— Aditya Raj Kaul (@AdityaRajKaul) April 25, 2025
அப்போது பாகிஸ்தான் தூதரக அதிகாரி அவர்களிடம் கழுத்தை அறுத்து விடுவேன் என்று பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார்.இது தொடர்பான காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறிலங்கா இராணுவ அதிகாரியின் மிரட்டல்
இதேவேளை கடந்த 2018 ஆம் ஆண்டு சிறிலங்கா சுதந்திர தினத்தன்று லண்டனில் இலங்கை தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் போது, சிறிலங்கா இராணுவ அதிகாரி பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ ஆர்ப்பாட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் கழுத்தை அறுப்பதாக சைகை காட்டினார் என குற்றம் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.