இலங்கையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்ட ஆளில்லா விமானச் சேவையைச் சோதனை செய்வதற்கான திட்டங்களை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையகம் அறிவித்துள்ளது.
சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் தமிந்த ரம்புக்வெல்ல, இந்த முன்னெடுப்பு ஒரு முன்னோடித் திட்டமாகச் செயல்படுத்தப்படும் என்றும் இது விமானப் போக்குவரத்தை நவீனமயமாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாக அமையும் என்றும் கூறியுள்ளார்.
ஆறு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன்
ஒவ்வொரு ட்ரோன் விமானமும் ஆறு பயணிகளை ஏற்றிச் செல்லும் திறன் கொண்டது என்று குறிப்பிட்டுள்ளார்.

சீனா, சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்தில் இதுபோன்ற திட்டங்கள் ஏற்கனவே வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகின்றன என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
Source: https://tamilwin.com/article/passenger-carrying-drone-service-sri-lanka-1784015397

