கொழும்பிற்கு அருகில், நான்கு கோடி ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – நவகமுவ பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
நவகமுவ, கொரதொட்டை , வெலிஹின்ன பிரதேசத்தில் வைத்து சந்தேக நபர் கைது செய்யப்படும் போது அவரிடம் இருந்து நான்கரை கிலோ ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த போதைபொருளின் பெறுமதி நான்கு கோடி ரூபா என கணிப்பிடப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக சந்தேக நபரிடம் இருந்து ஐநூறு கிராம் எடைகொண்ட ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சம்பவம் தொடர்பில் நவகமுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.