முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சாவகச்சேரி வைத்தியசாலை விவகாரம்! யாழில் கைதானவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

யாழ்ப்பாணத்தில் (Jaffna) சுகாதார அமைச்சர் பங்கேற்ற கலந்துரையாடலில் குழப்பம்
விளைவித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் பிணையில்
விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முற்படுத்தப்பட்டபோது
75000 ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

சுகாதார மேம்பாடுகள் 

எதிர்வரும் 21ம் திகதி குறித்த நபரை சாவகச்சேரி நீதவான் நீதிமன்றத்தில்
மீண்டும் முன்னிலையாகுமாறு நீதவானால் உத்தரவிடப்பட்டது.

person-discussion-minister-of-health-release-bail-

வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண
சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண தலைமையில்
நடைபெற்றபோது குழப்பத்தில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் சாவகச்சேரி
பொலிஸாரால் குறித்த நபர் நேற்று கைதுசெய்யப்பட்டார். 

வடக்கு மாகாணத்தின் சுகாதார மேம்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண சபை கேட்போர் கூடத்தில் சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரண, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண ஆளுநர், சுகாதார துறை உயரதிகாரிகள், வைத்தியர்கள் பங்கேற்புடன் நேற்று(17) இடம்பெற்றது. 

இதன்போது, கூட்டத்தில் அநாமதேயமாக பங்கேற்ற ஒருவர் கலந்துரையாடலை முகநூல் வழியாக நேரலையில் ஒளிபரப்பியுள்ளார்.

இதனையடுத்து, முகநூல் நேரலை செய்யவேண்டாம் எனவும் அவரை அங்கிருந்து வெளியேறுமாறும் அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில் அதனை மறுத்து தொடர்ந்து அங்கேயே அமர்ந்திருந்துள்ளார். 

இதன்போது, கூட்டநிறைவில் அங்கு சுகாதார அமைச்சருடன் பேச முற்பட்ட நிலையில் அமைச்சர் அங்கிருந்து செல்லவே, கூட்டத்தில் நின்ற அதிகாரிகளுடன் குழப்பத்தில் ஈடுபட்டிருந்தார். 

இதேவேளை, அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர் உள்ளிட்ட உயரதிகாரிகள் பங்கேற்ற கலந்துரையாடலில் அநாமதேயமாக குறித்த நபர் பங்கேற்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன் அழையா விருந்தாளியாக பங்கேற்ற சாவகச்சேரி வைத்தியசாலை முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவும் முகநூல் நேரலை செய்தமையும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்தநிலையில்,  குழுப்பம் விளைவித்த நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன மேற்கொண்டுள்ள விஜயத்தின் போது இடம்பெற்ற கலந்துரையாடலில் குழப்பத்தை ஏற்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்திருந்த நிலையிலேயே அவருக்கு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. 

மேலும், சாவகச்சேரி வைத்தியசாலையில் தற்பொழுது நியமனம் பெற்று கடமையில் இருக்கும் அதிகாரியே வைத்தியசாலையின் தற்போதைய பதில் வைத்திய அத்தியட்சகர் என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன இதன்போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.