சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களுடன் நேற்று (6) பொகவந்தலாவ பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இதேவேளை, குறித்த சந்தேகநபர் பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட கர் கசோல் மேல் பிரிவு பிரதேசத்தில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வை மேற்கொண்டுள்ளார்.
சம்பவத்தில் கைதான நபர் 38 வயதுடைய பொகவந்தலாவ பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.