மொனராகலை, பிபில நகரத்தில் பேருந்து நிலையத்தில் குடிபோதையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், பத்து வயது சிறுமியிடம் தவறாக நடந்துக் கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கடந்த பத்தாம் திகதி சிறுமியை முத்தமிட்ட நிலையில் பொலிஸ் சார்ஜன்ட் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் மஹியங்கனை பிரதேசத்தை சேர்ந்தவராகும்.
குடிபோதையில் மற்றும் ஒழுங்கீனமாக நடந்து கொண்டமை, சிறுமியின் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்தமை தொடர்பில் அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பாலியல் துஷ்பிரயோகம்
சந்தேகநபர் பிபில நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனார்.

இதன்போது தலா 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 சரீர பிணையில் செல்ல நீதிபதி உத்தரவிட்டார்.

