கொரியாவில் போட்டி பரீட்சையின்றி வேலை வாங்கி தருவதாகக் கூறி 500 இளைஞர்களிடம் இருந்து சுமார் இரண்டரை கோடி ரூபாவை தென்னிலங்கையின் பலமான அரசியல்வாதி ஒருவர் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால் இதுவரை எவரும் அனுப்பப்படவில்லை எனவும் இளைஞர்கள் குழு ஒன்று குற்றம் சுமத்தியுள்ளது.
அரசாங்கத்தின் ஊடாக போட்டி பரீட்சையின்றி கொரியாவில் வேலை வாங்கி தருவதாக குறித்த இளைஞர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை – ஈரானுக்கிடையில் 5 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து
இதற்காக தென்னிலங்கை அந்த அரசியல்வாதி, 500 இளைஞர்களிடம் இருந்து தலா 40,000 ரூபா பணம் பெற்றுக்கொண்டதாகவும், தலா 1500 ரூபா கட்டணமாக பெற்று பயிற்சி வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
இளைஞர் குழு கவலை
கொழும்பு மாகொல பிரதேசத்தில் ஆறு நாட்களாக இடம்பெற்ற பயிற்சியில் இளைஞர்கள் குழுவொன்று கலந்துகொண்டதாகவும் இந்த இளைஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
விவசாயத்துறையில் பரீட்சையின்றி உடனடியாக வேலை வாய்ப்பு வழங்கப்படும் என அரசியல்வாதி கூறியதாகவும் ஒரு மாவட்டத்திதிற்கு ஐம்பது வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
பயிற்சிக்கு சென்ற ஒவ்வொரு இளைஞனும் இந்த அரசியல்வாதியிடம் பொலிஸ் அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை கையளித்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் ஒரு இளைஞன் கூட கொரியாவிற்கு வேலைக்கு அனுப்பப்படாததால் செலவு செய்த பணத்தை மீண்டும் பெறுவதிலும் நிச்சயமற்ற நிலை ஏற்பட்டுள்ளதாக குறித்த இளைஞர் குழு கவலை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது குறித்து ரணிலின் முடிவு
இலங்கையை உலுக்கிய கோர விபத்து! காயமடைந்தவர்கள் குறித்து புதிய தகவல்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |