இலஞ்ச ஊழல்
ஆணைக்குழுவினரால் கிளிநொச்சி (Kilinochchi) – கரைச்சி பிரதேச சபை வருமான உதவியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது நடவடிக்கையானது, (03.09.2024) உருத்திரபுரம் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது நடவடிக்கை
குறித்த வருமான வரி உத்தியோகத்தர்கள் இருவரும் இலஞ்சம் வாங்குவதாக ஆணைக்குழுவுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.