முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவில் ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் திட்டம் ஆரம்பம்

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கு
ஏற்ப ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில்
வழங்கும் நிகழ்வு முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த நிகழ்வானது இன்று (18) புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மண்டபத்தில்
இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இராஜாங்க அமைச்சரும் முல்லைத்தீவு மாவட்ட
ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான காதர் மஸ்தான் கலந்து சிறப்பித்தார்.

புலமைப்பரிசில்கள் 

நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் விசேட உரையானது காணொளி வாயிலாக காட்சிப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு கல்வி வலயத்திற்குட்பட்ட 472 மாணவர்களுக்கும், துணுக்காய் கல்வி
வலயத்திற்குட்பட்ட 450 மாணவர்களுக்கும் மொத்தமாக 922 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்
வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் தெரிவு குடும்பங்களில் உயர்தர மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6000 ரூபா வீதமும், தரம்
1 முதல் 11 வரையான மாணவர்களுக்கு 3000 ரூபாவும் என 24 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

president-education-scholarship-scheme-mullaithivi

இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர்,
மேலதிக அரசாங்க அதிபர் (நிர்வாகம்), மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், மாகாண
கல்விப்பணிப்பாளர், திட்டமிடல் பணிப்பாளர், அதிபர்கள், ஆசிரியர்கள், பிரதேச செயலாளர்கள்,
அபிவிருத்தி லொத்தர் சபையின் பிரதி முகாமையாளர், வலயக்கல்வி பணிப்பாளர்கள், மாவட்ட செயலக பதவி
நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து
கொண்டனர்.

GalleryGalleryGalleryGallery

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.