ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி பாடசாலை மாணவர்களின் கல்வியை மேம்படுத்த நடைமுறைப்படுத்தப்படும் “ஜனாதிபதி புலமைப் பரிசில்” திட்டத்தின் கீழ் 2024 ஆம் ஆண்டில் 116,000 மாணவர்களுக்கு புலமைப் பரிசில்கள் வழங்கப்பட உள்ளன.
ஒதுக்கப்பட்டுள்ள நிதி
க.பொ.த. உயர்தரம் கற்கும் 6,000 மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.6,000 வீதம் 24 மாதங்களுக்கு வழங்கப்படும் புலமைப் பரிசில் திட்டத்திற்காக ரூ.824 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தரம் ஒன்று முதல் 11 வரையான 100,000 மாணவர்களுக்கு மாதாந்தம் ரூ.3,000 வீதம் 12 மாதங்களுக்கு புலமைப் பரிசில் வழங்கவிருப்பதோடு இதற்காக ரூ.3,600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
பிரிவெனா மற்றும் பிக்கு கல்வி நிறுவனங்களில் சாதாரண தரம் கற்கும் மாணவருக்கான புலமைப் பரிசில் திட்டத்திற்காக ரூ.288 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
க.பொ.த உயர்தரம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம் பிரிவில் கற்கும் பிக்கு மாணவருக்கான புலமைப்பரிசில் திட்டத்திற்காக ரூ.720 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொலைத் தொடர்பு பரிவர்த்தனை ஆணைக்குழுவும் ஜனாதிபதி நிதியமும் இணைந்து இந்த புலமைப் பரிசில்களை வழங்குகின்றன. இதன்படி தற்போது செயற்படுத்தப்படும் புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாக இந்தத் திட்டத்தில் ரூ.5,000 மில்லியனுக்கும் அதிகமான தொகை மாணவர்களுக்கு வழங்கப்படவுள்ளது.
இதன்படி, தற்பொழுது க.பொ.த உயர்தர மாணவர் மற்றும் தரம் ஒன்று முதல் 11 வரையான மாணவருக்காக இரு புலமைப்பரிசில் திட்டங்கள் செயற்படுத்தப்படுகின்றன.
இவற்றின் கீழ்,
ஆகியோருக்கு இந்தத் திட்டத்தின் கீழ் புலமைப் பரிசில் வழங்கப்படும்.
தெரிவு செய்யப்பட்ட அனைத்து மாணவர்களுக்கும் பாடசாலை மட்டத்தில் புலமைப் பரிசில்களை வழங்க ஜனாதிபதி நிதியம் ஏற்பாடு செய்துள்ளது.
ஒவ்வொரு பாடசாலையின் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் புலமைப் பரிசில் வழங்கப்படுகிறது. புலமைப் பரிசில் குறித்த விபரங்களை வலயக் கல்வி அலுவலகங்களில் பெற முடியும்.
எனவே இதுவரை புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பிக்காத பாடசாலைகள் இருக்குமானால் விரைவாக விண்ணப்பிக்குமாறு ஜனாதிபதி நிதியம் கோரியுள்ளது.
அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள மேற்படி இரண்டு புலமைப்பரிசில் திட்டங்களுக்கு மேலதிகமாக பிரிவென மற்றும் பிக்கு கல்வி நிலையங்களின் மாணவர்களுக்கு 5,000 புலமைப் பரிசில் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் கொழும்பில் நடைபெறவுள்ளது.