மன்னார் – வங்காலையில் படுகொலை செய்யப்பட்ட அருட்பணி அருட்தந்தை மேரி பஸ்ரியனின் 40 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று நாடளாவிய ரீதியில் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்து, உயிரிழந்த மக்களின் உடல்களை மீட்டு அடக்கம் செய்யவும், பல்வேறு மனிதாபிமான பணிகளில் ஈடுபட்டு வந்த மன்னார் வங்காலை புனித ஆனாள் ஆலய பங்குத்தந்தை அருட்பணி மேரி பஸ்ரியன் 1985 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 6 ஆம் திகதி அரச படைகளால் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது..
மன்னார் மாவட்டத்தில் 1984 -85 ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள், இனப்படுகொலைகள் பற்றிய தகவல்களை வெளியுலகத்துக்கு அருட் தந்தை மேரி பஸ்த்தியன் வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆனாள் ஆலயத்தில் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தபோது அருட் தந்தை மேரி பஸ்த்தியனையும் அவருடன் இருந்த பொதுமக்கள், சிறுவர்களையும் இலங்கை இராணுவத்தினர் கொலை செய்ததாக குற்றச்சாட்டுக்கள் இன்றுவரை முன்வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், குறித்த படுகொலை தொடர்பில் லங்காசிறியின் சிறப்பு
நேர்காணலில் கலந்துக்கொண்ட, அருட்தந்தை மா.சத்திவேல், பேரினவாத சக்திகளின் ஆதிக்க நிலையே குறித்த படுகொலைக்கு காரணம் என குற்றம் சுமத்தினார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்,