கண்டி – பல்லேகல சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் கடத்த முயன்ற சிறைச்சாலைக் காவலர் ஒருவர் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று(20) இந்தச் இடம்பெற்றுள்ளது.
சிறைச்சாலைக் காவலர் கைது
சிறைச்சாலை காவலரின் தொப்பியை புலனாய்வுப் பிரிவினர் பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அதற்குள் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிராம், 28 மில்லி கிராம் எடை கொண்ட ஐஸ் போதைப் பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனையடுத்து சிறைச்சாலைக்குள் போதைப் பொருள் கடத்த முயன்ற குற்றச்சாட்டில் குறித்த சிறைச்சாலைக் காவலர் கைது செய்யப்பட்டு, பல்லேகல பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு எதிராக சிறைச்சாலைகள் திணைக்களமும் உள்ளக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.