சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் பெரும் கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களத்தின் பிரதானிகளது சொத்து விபரங்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு விசாரணை ஆணைக்குழு மற்றும் குற்ற விசாரணை பிரிவு என்பன நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை குவித்து சொகுசு வாகனங்கள், ஆடம்பர வீடுகள் போன்றவற்றை திடீரென கொள்வனவு செய்து கோடீஸ்வரர்களாக மாறியுள்ள அதிகாரிகள் தொடர்பில் இவ்வாறு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பல்வேறு முறைப்பாடுகள்
திடீரென செல்வந்தர்களாக மாறிய அதிகாரிகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

சிறைச்சாலை அதிகாரிகளின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு பல்வேறு அமைப்புக்கள் மற்றும் தனி நபர்கள் செய்துள்ள முறைப்பாடுகளின் அடிப்படையில் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளது.
சிறைச்சாலை பிரதானிகளின் வீடுகள், வங்கிக் கணக்குகள் மற்றும் காணிகள் என்பன தொடர்பில் நீதிமன்றின் உத்தரவின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

