தனியார் துறையின் சம்பளத்தை அதிகரிக்கும் அரசாங்கத்தின் திட்டம் குறித்து
இலங்கை ஐக்கிய தேசிய வணிகக் கூட்டணி, அதிருப்தி தெரிவித்துள்ளது.
அத்தகைய அதிகரிப்பு தற்போது சாத்தியமில்லை என்று இலங்கை ஐக்கிய தேசிய வணிகக்
கூட்டணி கூறியுள்ளது.
சம்பள உயர்வு
சம்பள உயர்வைச் செயல்படுத்துவதற்கு முன்னர், வணிகங்கள் நிதி
நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு கால அவகாசம் தேவை என்று சங்கத்தின் தலைவர்
டானியா அபேசுந்தர வலியுறுத்தியுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அது மிகவும் நல்ல
விடயமாகும்.
எனினும், தனியார் துறையையும் அதனை நடைமுறைப்படுத்தவேண்டும் என்று கூறும்போது,
அது தொடர்பில் அரசாங்கம் சிந்திப்பது சிறப்பாக இருக்கும்
தனியார்துறை சம்பளத்தை 21,000 ரூபாயாக ஆக உயர்த்தும்போது, அங்கே 6,000 ரூபாய்
வித்தியாசம் உள்ளது.
அடிப்படை சம்பளம்
அத்துடன் 50-60 மணிநேரங்களுக்கு மேலதிக நேரக்கொடுப்பனவுகள் உள்ளன.
இதன்போது, ஒரு மணி நேரத்திற்கு 210 ரூபாயை செலுத்தப்படுகிறது.
எனவே 15,000 அடிப்படை சம்பளத்தை அதிகரிக்க கோருவது,தொழில்முனைவோராகிய தமக்கு
மிகவும் கடினமான விடயம் என்றும் டானியா அபேசுந்தர சுட்டிக்காட்டியுள்ளார்.