பிரியங்கா
கடந்த சில நாட்களுக்கு முன் அதாவது ஏப்ரல் 16ம் தேதி ஸ்வீட் சர்ப்ரைஸாக வெளிவந்த விஷயம் தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம்.
விஜய் டிவியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை துவங்கி பல திறமைகளை வெளிக்காட்டி முன்னணி தொகுப்பாளினியாக இருக்கும் பிரியங்கா தற்போது சூப்பர் சிங்கர் மற்றும் ஸ்டாட் மியூசிக், ஊ சொல்றியா ஊஊ சொல்றியா என 3 நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
சிங்கிளாக வலம்வந்த இவர் எந்த ஒரு அறிவிப்பும் இன்றி திருமண புகைப்படத்தை வெளியிட ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியானார்கள், அதோடு மனதார வாழ்த்தும் கூறி வந்தனர்.
வீடியோ
இந்த நிலையில் தொகுப்பாளினி பிரியங்கா திருமணத்திற்கு பின் வெளியிட்ட வீடியோ என்று அவர் பேசியது வைரலாகி வருகிறது. அதில் ஹலோ மக்களே எனக்கு வாழ்த்து கூறி அனைவருக்கும் நன்றி.
இவ்வளவு அன்பு கொடுக்கிறீர்கள் என்றால் நான் எதோ செய்துள்ளேன் என தெரிகிறது, கண்டிப்பாக இனி உங்களை நான் சிரிக்க வைக்க வேலை செய்வேன். கடந்த 3 ஆண்டுகளாக எனக்கு இருந்த நாட்கள், ஆனால் இப்போது சந்தோஷமாக உள்ளேன் என பேசியுள்ளார்.
ஆனால் இந்த வீடியோ அவர் திருமணத்திற்கு பின் வெளியிட்ட வீடியோவா அல்லது எப்போதோ வேறு எதற்காக பேசிய வீடியோவா இது என தெரியவில்லை.