அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்க்கு எதிராக அந்நாட்டு மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று(06.04.2025) அமெரிக்கா முழுவதும் உள்ள நகரங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து மிகப்பெரிய நாடு தழுவிய எதிர்ப்பு இது என கூறப்படுகின்றது.
ஊழல் மற்றும் குழப்பமான நிர்வாகம்
பொஸ்டன், சிகாகோ, லொஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் மற்றும் வொஷிங்டன் ஆகிய மாநிலங்களில் இந்த எதிப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
Free America, protest every day#Indiana #paradesongkhlaxgotchabell pic.twitter.com/4S4hrh65Jo
— Lindsay Louisiana (@Lou62145Lindsay) April 6, 2025
இதன்போது, ட்ரம்பின் ஊழல் மற்றும் குழப்பமான நிர்வாகத்தால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.