முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

முல்லைத்தீவு கோட்டாபய முகாம் முன் வெடித்த போராட்டம் – குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர்

முல்லைத்தீவு (
Mullaitivu) மாவட்டத்தில் 8 வருடங்களுக்கு மேலாக நீதி கோரி போராட்டம் மேற்கொண்டு வரும் முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டமானது இன்று காலை (08.3.2025) 10.30 மணியளவில் முல்லைத்தீவு கோட்டாபய கடற்படை முகாமிற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு வட்டுவாகல் பாலம் ஊடாக பேரணியாக சென்று வட்டுவாகல் பகுதியில் இறுதியாக கையளிக்கப்பட்ட இடத்திற்கு முன்பாக வரை சென்று போராட்டம் நிறைவடைந்திருந்தது.

சர்வதேசமே எமக்கான தீர்வு என்ன

போராட்டத்தின் போது, சர்வதேசமே பதில் சொல், சர்வதேசமே எமக்கான தீர்வு என்ன!?, பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே நீதியின்றி இறந்து கொண்டிருக்கின்றோம், கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம்! எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும்.

முல்லைத்தீவு கோட்டாபய முகாம் முன் வெடித்த போராட்டம் - குவிக்கப்பட்டுள்ள காவல்துறையினர் | Protest In Front Of Gotabaya Camp In Mullaitivu

மற்றும், தமிழரை கடத்தாதே! இனவழிப்பு செய்யாதே! உங்கள் சிறைக்கூடம் எங்கள் பிள்ளைகளுக்கு என்ன கல்விக்கூடமா? எமது நாட்டில் நாம்வாழ உரிமையில்லையா? உலகமெல்லாம் பெண்கள் உரிமை பேசும் இந்நாளிலும் தெருவில் கிடந்து அழவைத்திருக்கிறது அரசு, போன்ற பல்வேறு கோசங்களையும் எழுப்பி பதாதைகளை தாங்கியவாறு போராட்டத்தை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த போராட்டத்தின் போது வட்டுவாகல் விகாரைக்கு செல்லும் வழியில் அதிகளவான காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

https://www.youtube.com/embed/hUiHSrOdwBk

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.