அண்மையில் காரைதீவு மாவடிப்பள்ளி பாலத்திற்கருகில் உயிரிழந்த சம்மாந்துறையைச் சேர்ந்த ஆறு
மதரஸா மாணவர்கள் மற்றும் பொதுமகன் ஒருவருமாக எழு குடும்பங்களுக்கு
அரசாங்கத்தினால் ரூபாய் 250000 நட்டயீடாக வழங்கி வைக்கும் நிகழ்வு சம்மாந்துறையில் இடம்பெற்றுள்ளது.
சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல் முஹம்மது ஹனீபா தலைமையில் இடம்பெற்ற இந்
நிகழ்வுக்கு பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினரும்,பிரதேச ஒருங்கிணைப்பு
குழுத் தலைவருமான ஏ. ஆதம்பாவா கலந்து கொண்டு கசோலைகளை வழங்கி வைத்தார்.
நட்டயீடுத் தொகை
மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக
அபேவிக்ரம கலந்து கொண்டு சிறப்பித்தார்.
அத்துடன் குறித்த நட்டயீடுத் தொகையினை ஒரு மில்லியனாக அதிகரித்து வழங்குவதற்குரிய
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் நிகழ்வில் தெரிவித்திருந்தார்.