முல்லைத்தீவு (Mullaitivu) புதுக்குடியிருப்பு நகரில் அமைந்துள்ள சந்தைப்பகுதியினை
புதுக்குடியிருப்பு பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் மற்றும்
பிரதேசபையினர் இணைந்து திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பானது இன்றையதினம் (04.09.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை நடவடிக்கை
இந்த பரிசோதனை நடவடிக்கையில் பாவனைக்கு உதவாத வகையில் இருந்த மரக்கறிகள்,
மீன்கள் , இறால் , பழங்கள் , உப்பு போன்றவை விற்பனையாளர்களிடம் இருந்து பறிமுதல்
செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த விற்பனையாளர்கள் நீதிமன்றில்
முற்படுத்தப்படவுள்ளனர்.
சுற்றிவளைப்பு பரிசோதனை நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு சுகாதார
வைத்திய அதிகாரி பி.சத்தியரூபன் உள்ளிட்ட சுகாதார பரிசோதகர்கள், பிரதேச
சபையினர் இணைந்து மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.