முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டள்ளமையானது சர்வதேச ரீதியாக தற்போதுவரை பேசுபொருளாகவே உள்ளது.
தமிழ் அரசியல்வாதிகள்
ரணிலின் கைது விவகாரத்தில் ஏதாவது பேசவேண்டுமென்று பேச முற்பட்டு தமது விசுவாசத்தை காட்ட முற்பட்டு தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு நின்றதையும் கடந்த சில தினங்களாக அவதானிக்க முடிந்தது.
கடந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பகுதியினரின் வாக்குகளை திரட்டுவதற்காக வழமையாக ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வருடா வருடம் வழங்கப்படும் பன்முகப்படுத்தப்படும் நிதியை விட மேலதிகமாக 80 கோடி ரூபாய் நிதியை சில உறுப்பினர்களுக்கு ரணில் விக்ரமசிங்க வழங்கியிருந்தார்.
சில தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிதியை தாங்களே நேரடியாக பெற்றுக்கொள்ள அனுமதி வாங்கி கையாடல் செய்திருந்தார்கள்.
இந்த விடயங்கள் தொடர்பில் நோக்குகின்றது உண்மைகள் நிகழ்ச்சி….