இலங்கையில் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் பாதாள உலக குழுவின் துப்பாக்கி சூட்டு சம்பவங்களின் பின்னணியில் வெளிநாட்டிலுள்ள குழுக்களின் மோதல் நிலைமை உள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
டுபாயில் மறைந்திருக்கும் பாதாள உலகக் கும்பல்களுக்கு இடையிலான போதைப்பொருள் வர்த்தக பிரச்சினைகள் இவ்வாறான வன்முறைகள் இடம்பெறுவதாக புலனாய்வு அமைப்புகளுக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
பொலிஸார் விசாரணை
பாகிஸ்தானின் போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தவறான தகவல்களை வழங்குவதன் மூலம் போதைப்பொருள் பெறுவது தடுக்கப்படுவதாகவும், இதனால் டுபாயில் இடம்பெறும் விருந்துகளில் முரண்பாடுகள் ஏற்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இலங்கை பாதுகாப்புப் படையினருக்கு தகவல்களை வழங்குவதும், பிராந்தியங்களில் தலைமைத்துவம் குறித்த குழப்பமும் முக்கியப் பிரச்சினையாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டுபாயிலுள்ள போட்டியளார்கள் மீதுள்ள கோபத்தை இலங்கையில் உள்ள அவர்களின் உதவியாளர்கள் மூலம் முன்னெடுப்பது முக்கிய பிரச்சினையாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்தப் பிரச்சினைகள் காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையிலான வெறுப்பை அவரது உதவியாளர்கள் ஊடாக தீர்த்துக் கொள்வதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.