புத்தளம், கற்பிட்டி – கப்பலடி கடற்கரைப் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோதமாகக் கொண்டுவரப்பட்ட பீடி இலை
பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக்
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போதே இந்தப் பீடி
இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
24 பொதிகள்
இதன்போது, 776 கிலோகிராம் நிறையுடைய பீடி இலைகள் அடங்கிய 24 பொதிகள்
கைப்பற்றப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட பீடி இலை பொதிகள் மேலதிக விசாரணைகளுக்காகக் கடற்படையினரின்
பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.