யாழ்ப்பாணம் (Jaffna) வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை பகுதியில் வீடுடைத்து தளபாடப்
பொருட்கள் பலவற்றை திருடிய சந்தேகநபர்கள் இருவர் வட்டுக்கோட்டை பொலிஸாரால்
கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீடுடைத்து திருடியதாக கடந்த 16ஆம் திகதி வட்டுக்கோட்டை பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்னிலை
இந்நிலையில் விசாரணைகளை
மேற்கொண்ட பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்களை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தியவேளை,
இரண்டு சந்தேகநபர்களையாம் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான்
உத்தரவிட்டுள்ளார்.