எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண்ணை தகாத முறையில் துன்புறுத்தியதாக கூறப்படும் இலங்கையரான கப்பல் மாலுமியை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி நேற்று உத்தரவிட்டார்.
விமான நிலைய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசபாபதி குஷாந்தன் என்பவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
டுபாயில் இருந்து திரும்பும் போது தென்னாபிரிக்காவை சேர்ந்த எமிரேட்ஸ் விமானப் பணிப்பெண்ணை சந்தேக நபர், தகாத முறையில் துன்புறுத்தியதாக விமான நிலைய பொலிஸார் நீதிமன்றத்தில் ஆதாரங்களை முன்வைத்துள்ளனர்.
விளக்க மறியல்
இந்த நிலையில் சர்வதேச அளவில் அவதூறு ஏற்படுத்திய சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதால், சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தகவல்களை பரிசீலித்த பின்னர், சந்தேக நபரை விளக்கமறியலில் வைத்த நீதவான், வழக்கை 5 ஆம் திகதி மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டார்.
இது தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது இறுதி முடிவுகள் எடுக்கப்படும் என நீதவான் தனுஜா லக்மாலி குறிப்பிட்டுள்ளார்.