ரி 20 உலக கிண்ணத்தை வென்ற நிலையில் இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் விராட் கோலி(virat kohli) ரி 20 போட்டிகளில் ஓய்வை அறிவித்ததை தொடர்ந்து இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மாவும்(rohit sharma) ரி 20 கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ஓய்வு தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
இதுவே எனது கடைசி ஆட்டம். விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை.
கோட்டை கடந்ததில் மகிழ்ச்சி
நான் கிண்ணத்தை மோசமாக விரும்பினேன். வார்த்தைகளில் கூறுவது மிகவும் கடினம். இது நான் விரும்பியது மற்றும் நடந்தது.
என் வாழ்க்கையில் இதற்காக நான் மிகவும் ஆசைப்பட்டேன். இந்த முறை கோட்டை கடந்ததில் மகிழ்ச்சி என தெரிவித்தார்.
ரோகித் சர்மா ரி 20 போட்டிகளில்159 ஆட்டங்களில் விளையாடி 4231 ஓட்டங்களை குவித்துள்ளார்.
ரி 20 கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்தவர் பட்டியலில் ரோகித் முதலிடத்தில் உள்ளார்.
சர்வதேச ரி 20 போட்டிகளில் ஐந்து சதங்கள் அடித்தவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
இரண்டாவது உலக கிண்ணம்
அவரது ரி 20 பயணம் 2007-ல் அறிமுகமான ரி 20 உலகக் கிண்ணத்துடன் தொடங்கியது.
அங்கு அவர் இந்தியாவின் முதல் பட்டத்தை வென்றதில் முக்கிய வீரராக இருந்தார். இப்போது, தலைவராக இந்தியாவை இரண்டாவது உலக கிண்ணத்தை வெல்ல அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான ராகுல் டிராவிட்டுக்கும் இதுவே கடைசி போட்டியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.