இந்தியாவில் இருந்து 1,485 மெட்ரிக் டொன் அளவிலான உப்பு இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
நாட்டில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று(27.01.2025) உப்பு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உப்பு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் உப்பினை இறக்குமதி செய்ய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.
இந்தியாவில் இருந்து இறக்குமதி
இதற்கமைய, 30,000 மெட்ரிக் டொன் உப்பு நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இருந்து பெப்ரவரி 28ஆம் திகதி வரை உப்பு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.