முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

சனிப் பெயர்ச்சி 2025! அதிர்ஸ்டத்தை பெறப்போகும் ராசியினர் யாவர்…

இந்து மக்களிடையே ஜோதிடத்தில், சனி மிகவும் சக்தி வாய்ந்த கிரகமாக பார்க்கப்படுகிறது.

அனைத்து கிரகங்களிலும் மிக முக்கியமான கிரகமான சனி பகவான் பார்க்கப்படுகிறார்.

இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை தனது  ராசியை சனி பகவான் மாற்றுவதாக ஜோதிட ரீதியில் நம்பப்படுகிறது.

சனி பெயர்ச்சியால் உருவாகும் சனியின் நிலை மாற்றத்தால், அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் பல வகையான மாற்றங்கள் ஏற்படுகின்றன.

ஏழரை சனியின் தாக்கம் 

அத்தகைய சூழ்நிலையில், சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் தாக்கம் ஏற்படக்கூடும்.

சனிப் பெயர்ச்சி 2025! அதிர்ஸ்டத்தை பெறப்போகும் ராசியினர் யாவர்... | Sani Peyarchi Palangal Parigarangal

சனி பகவான் இன்று (29.3.2025) இரவு 9.44 மணிக்கு தனது சொந்த வீடான கும்ப ராசியில் உள்ள பூரட்டாதி நட்சத்திரம் 3ஆம் பாதத்தில் இருந்து, மீனத்தில் உள்ள பூரட்டாதி 4ஆம் பாதத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

திருக்கணிதப் பஞ்சாங்கப்படி இந்த கிரகப்பெயர்ச்சி கணிக்கப்பட்டுள்ளது.

சனி பகவான் தனது 3ஆம் பார்வையால் கால புருஷ 2ஆம் இடமான ரிஷப ராசியையும், 7ஆம் பார்வையால் கால புருஷ 6ஆம் இடமான கன்னி ராசியையும், 10ஆம் பார்வையால் கால புருஷ 9ஆம் இடமான தனுசு ராசியையும் பார்க்கிறார்.

இன்றைய தினம் சனி பெயர்ச்சி நிகழப் போகிறது, இதே நாளில் சூரிய கிரகணமும் நிகழப் போகிறது. அதனுடன் இன்று சனி அமாவாசை ஆகும்.

மீன ராசிக்கு பெயர்ச்சி

ஜோதிடத்தின் படி, மீன ராசிக்கு பெயர்ச்சி அடையும் சனி ​​மகர ராசியில் இருந்து முழுமையாக வெளியேறுவார்.

சனிப் பெயர்ச்சி 2025! அதிர்ஸ்டத்தை பெறப்போகும் ராசியினர் யாவர்... | Sani Peyarchi Palangal Parigarangal

மேலும் கடகம் மற்றும் விருச்சிக ராசிக்கார்களுக்கும் சனி திசையில் இருந்து விமோசனம் கிடைக்கும் என கூறப்படுகிறது.

ரிஷப ராசிக்காரர்களுக்கு மங்கள பலன் கிடைக்கும். அதிகபட்ச நன்மைகள் உண்டாகும்.

ஆடம்பரங்களும், வசதிகளும் அதிகரிக்கும். நிதி நிலை சிறப்பாக இருக்கும். புதிய வழியில் வருமான அதிகரிக்கும். திடீர் இலாபம் பெறலாம்.

மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகர பலன் கிடைக்கும். தொழில் வளர்ச்சி அடையும்.

புதிய வாய்ப்புகளை பெறலாம். சமூக அந்தஸ்து உயரும். கௌரவமும் அதிகரிக்கும். வேலையில் பெரிய பதவியும் பொறுப்பும் கிடைக்கும்.

துலாம் ராசிக்காரர்களுக்கு விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.

வேலையில் முன்னேற்றம் ஏற்படக்கூடும். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல வளர்ச்சியைப் பெறலாம்.

வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும்.

முறையான வழிபாடு

ஒரு ஜாதகத்தில் அல்லது கோச்சாரத்தில் சனி பகவானால் ஏற்படக்கூடிய தாக்கம் நல்லதாகவும் இருக்கும் கெட்டதாகவும் இருக்கும்.

அது அவரவர்களின் பூர்வபுண்ணிய ஸ்தானத்தை பொருத்தே அமையும். ஒரு ஜாதகர் இந்த ஜென்மத்தில் என்ன அனுபவிக்க பிறந்திருக்கிறாரோ அதை விதிப்படி நடத்துபவர் சனி பகவான் என புராணக்கதைகள் குறிப்பிடுகின்றன.

சனிப் பெயர்ச்சி 2025! அதிர்ஸ்டத்தை பெறப்போகும் ராசியினர் யாவர்... | Sani Peyarchi Palangal Parigarangal

ஒவ்வொருவரும் தமது அன்றாட வாழ்வில் சில எளிய பழக்கவழக்கங்கள் மற்றும் முறையான வழிபாடுகளை மேற்கொள்ளும்போது நல்ல பலன்கள் நடக்க துவங்கும் என்பது நம்பிக்கை. முதலில், அவரவர் குல தெய்வத்தை பிரார்த்திக்க வேண்டும்.

தீர்க்க முடியாத பிரச்சினைகளை பிரபஞ்ச சக்தியிடம் ஒப்படைக்க வேண்டும். நேரம் கிடைக்கும்போது கோவில்களுக்கு சென்று வழிபடுதல் வேண்டும்.

இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் வீட்டில் தினமும் குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வங்களின் நாமங்களை உச்சரிக்கலாம்.

லலிதா சகஸ்ரநாமம், விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்கலாம். இவ்வாறு செய்வதன்மூலம் அன்றைய நாள் முழுவதும் புத்துணர்வுடன் இருக்கும்.

எதிர்வினைகளின் பாதிப்பு இருக்காது. அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். அசைவ உணவுகளை சாப்பிடும்போது அந்த பட்சிகள், விலங்குகளின் கர்மாவையும் கலந்து உண்ண நேரிடும்.

தினமும் இயன்ற தான தர்மங்கள் செய்யலாம். குறிப்பாக பட்சிகளுக்கும், விலங்குகளுக்கும் உணவிடுவது, வீட்டில் உள்ள செடிகளுக்கு தண்ணீர் விடுவது அதிக நன்மையை ஏற்படுத்தும்.

இதன்படி, 2025ஆம் ஆண்டின் இந்த சனி பெயர்ச்சி 12 இராசிகளுக்கும் எப்படி இருக்கும் என்று ஜோதிடர் ஆச்சார்யா ஹரிஷ் ராமன் ஜபிசி பக்தி ஊடாக அவர் பகிர்ந்துள்ளார்.

மேஷம்

ரிஷபம்

மிதுனம்

கடகம்

சிம்மம்

கன்னி

துலாம்

விருச்சிகம்

தனுசு

மகரம்

கும்பம்

மீனம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.