புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை முதலிடம் பிடித்துள்ளது.
இதன்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் குறித்த பாடசாலையின் மாணவி ஜோர்ச் ரோஷலினா 180 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் முதலாம் இடத்தினை தனதாக்கியுள்ளார்.
பெறுபேறுகள்
2024ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்றது.
இந்தநிலையில், குறித்த பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று (23) மாலை வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.