எதிர்வரும் மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு வடமாகாணத்தில் உள்ள தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தினை வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்றைய தினம் (20.02.2025) அறிவித்துள்ளார்.
பாடசாலை விடுமுறை
அதன்படி விடுமுறை வழங்கப்படும் தினத்திற்கு பதிலாக மார்ச் முதலாம் திகதி பாடசாலைகள் நடைபெறும் என வட மாகாண ஆளுநர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகள் : பிரதீபன்