புதிய இணைப்பு
கண்டி தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த தாதுவின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு கண்டி நகரம் மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் அமைந்துள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட 49 பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க கண்டி வலய அலுவலகம் முடிவு செய்துள்ளது.
அதன்படி, ஏப்ரல் 21ஆம் முதல் 25 வரை, 05 நாட்களுக்கு இந்த விடுமுறையை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கண்டி தலதா மாளிகையில் நடைபெறும் புனித தந்த தாதுவின் சிறப்பு கண்காட்சியை முன்னிட்டு கண்டி பகுதியில் உள்ள பல பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, கண்டியில் உள்ள 37 பாடசாலைகள் மூடப்பட உள்ளதாக மத்திய மாகாண கல்விச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அறிவிப்பு
அதன்படி, பாடசாலைகள் ஏப்ரல் 21ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை மூடப்படும் என்று அவர குறிப்பிட்டுள்ளார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையில் புனித பல்லின் சிறப்பு கண்காட்சி 16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிறது. இந்த நிகழ்வு 2025 ஏப்ரல் 18 முதல் 27 வரை, 10 நாட்களுக்கு நடைபெறவுள்ளது.