நடிகர் கார்த்தி
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் ஹிட் சீரியல் சரவணன் மீனாட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கார்த்தி.
இதை தொடர்ந்து சன் டிவி மற்றும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குல தெய்வம், அரண்மனை கிளி, மனசு போன்ற தொடர்களில் நடித்து வந்தார்.
வில்லன் ரோல்களில் தொடர்ந்து நடித்தவர் சன் டிவியில் ஒளிபரப்பான வானத்தை போல சீரியலில் முதலில் நெகட்டீவாக காட்டப்பட்டு பின் பாசிட்டிவ் கதாபாத்திரமாக மாறியது.
4 வருடங்களாக ஒளிபரப்பான இந்த தொடர் அஸ்வின் கார்த்தி வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது என்றே கூறலாம்.
மனைவிக்கு பரிசு
இவர் கடந்த 2023ம் ஆண்டு மேக்கப் ஆர்ட்டிஸ்ட் காயத்ரி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சமீபத்தில் குழந்தையும் பிறந்த நிலையில் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு போன் வாங்கி கொடுத்து சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.
View this post on Instagram