முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

நெல் விலை நிர்ணயத்தில் விவசாயிகளை கவனம் கொள்ளாத அரசாங்கம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

விவசாயிகளின் நிலையை கவனத்தில் கொள்ளாது, அரசாங்கம் விவசாயிகளின் கோரிக்கைகளை புறந்தள்ளி நெல்லுக்கான விலையை நிர்ணயித்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட
கமக்காரர்கள் அதிகார சபையின் செயலாளர் நிரஞ்சன் தெரிவித்துள்ளார். 

வெள்ள அனர்த்தம் காரணமாக பாரிய நஸ்டங்களை எதிர்கொண்ட விவசாயிகள்
அதிலிருந்து மீளமுடியாத நிலையில் உள்ள போது அரசாங்கத்தின் செயற்பாடுகள்
கவலையளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

 மட்டக்களப்பு ஊடக அமையத்தில் இன்று (06.02.2025) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

குறைந்த விலை..  

மேலும் அவர், நாங்கள் நெல் கொள்வனவு செய்வதற்காக தேசிய ரீதியில் உள்ள சங்கங்களுடன் இணைந்து
விலை நிர்ணயம் செய்யப்பட்டு அரசாங்கத்திற்கு
வழங்கப்பட்டிருந்தது.

ஏக்கருக்கு 25 மூடை என்ற வகையிலேயே இந்த நெல் விலை
மிகவும் குறைந்ததாக தீர்மானிக்கப்பட்டு அரசாங்கத்திற்கு
வழங்கப்பட்டிருந்தது. ஆனால் அவற்றினை கருத்தில் கொள்ளாமல் அரசாங்கம் அதனைவிட
குறைந்த விலையில் நெல்விலையை அறிவித்துள்ளது.

நெல் விலை நிர்ணயத்தில் விவசாயிகளை கவனம் கொள்ளாத அரசாங்கம்: முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Setting Paddy Prices Farmers Request Government

வெள்ள அனர்த்தம் காரணமாக விவசாயிகள் பாரிய நஸ்டத்தினை நாடளாவிய ரீதியில்
எதிர் கொண்டுள்ளனர். ஏக்கருக்கு சிலருக்கு நான்கு ஐந்து மூடைகளும் அறுடை
கிடைத்துள்ளது.

ஆனால் அரசாங்கம் அவற்றினை கருத்தில் கொள்ளவில்லை. உர விலைகளை
குறைக்காமல் எண்ணையின் விலையினை குறைக்காமல் நெல் விலையினை மட்டும் குறைத்து
கொள்வனவு செய்ய முனைகின்றது அரசாங்கம்.
இந்த அரசாங்கத்தினை நம்பியே நாங்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தோம். விவசாயிகளை
கருத்தில்கொள்ளுங்கள” என வலியுறுத்தியுள்ளார்.  

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.