வடக்கு கிழக்கு மக்களுக்கும் சிறந்த ஒரு எதிர்காலத்தை எம்மால் அமைத்து தர
முடியும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை
வேட்பாளர் இரா.சாணக்கியன் (Shanakiyan Rasamanickam) தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – பட்டிருப்பு (
களுவாஞ்சிகுடி) தேசிய பாடசாலையில் வாக்களித்து விட்டு கருத்துத்
தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும்
தெரிவிக்கையில்,
நான் எனது வாக்கை எனக்காக செலுத்தி இருக்கின்றேன்.
தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னம்
என்னுடைய வாக்கு
எதிர்வருகின்ற ஐந்து வருடத்தின் எமது மக்களின் தலைமைத்துவத்தை தீர்மானிக்கின்ற
வாக்காக நான் இதனை பார்க்கிறேன். அதனை நான் உரியவாறு பயன்படுத்தி இருக்கின்றேன்.
அதுபோல் வட கிழக்கிலுள்ள மக்கள் அனைவரும் இம்முறை ஒரு அணியாக நின்று இலங்கை தமிழரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தை ஆதரிக்க வேண்டும். அடுத்த ஐந்து
வருடத்தில் இந்த வடக்கு கிழக்கை தமிழரசுக் கட்சியை சேர்ந்த நாங்கள் பொறுப்பு
எடுத்து மக்கள் அனைவருக்கும் ஒரு சிறந்த எதிர்காலத்தை அமைத்து தருவதற்கு மக்கள்
அளிக்கும் வாக்காகவே அமையும்.
குறிப்பாக நாட்டின் அரசாங்கம் ஜனாதிபதியினுடைய பிரதான கட்சிக்கு பெரும்பான்மையை
இந்த தேர்தலில் வருவது சந்தேகமாக உள்ளது. இச்சந்தர்ப்பத்தில் தமிழ் பேசும்
தரப்பின் சார்பிலே பேர பேசும் சக்தியாக நாங்கள் இருக்கக்கூடிய ஒரு அரிய
சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது.
இந்த வாய்ப்பை நமது மக்கள் சரியாக
பயன்படுத்திக் கொள்ள வேண்டும் அடுத்த ஐந்து வருடத்தில் நாங்கள் இந்த
மக்களுக்கான சிறந்த எதிர் எதிர்காலத்தை அமைத்துக் கொடுப்போம் அதற்காக
உழைக்கக்கூடிய நபர்களை நாம் எமது கட்சி சார்பில் களம் இறக்கி உள்ளோம்.
தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு
தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு இந்த நாட்டில் நடந்த சமூக விரோத செயல்கள்,
இனப்படுகொலை, போன்றவற்றுக்கான விசாரணைகள் நீதி கிடைக்க வேண்டும்.
நில அபகரிப்பு,
அரசாங்கத்தினால் முகம் கொடுக்கும் பிரச்சினைகளுக்கு தீர் காணலல் வடகிழக்கிலே
அபிவிருத்தி நிதிமன்றை உருவாக்குதல் போன்ற பல விடயங்களை முன்னுறுத்தி நாங்கள்
பேரம் பேசும் சக்தியாக எமது உடைய மக்கள் எங்களுடைய கரங்களை பயன்படுத்தினால்
மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கும் வடக்கு கிழக்கு வாள் மக்களுக்கும் சிறந்த ஒரு
எதிர்காலத்தை எம்மால் அமைத்து தர முடியும்.
சரியான நபர்களை தேர்வு செய்யக்கூடிய வாய்ப்பு கிடைக்கும்போது மக்களுக்கு சரியான
விடையங்களை அமைத்து தருவதற்கு நான் உழைப்பேன் என அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.