முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் அறிந்துகொள்ள

பிரித்தானிய தடையின் பின் புதிய அவதாரம் எடுக்கப் போகும் சவேந்திர சில்வா

இலங்கை இராணுவத்தின் முன்னாள் தளபதிகளான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் ஜகத் ஜயசூரிய, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் ஒப் த பீல்ட் வசந்த கரன்னாகொட மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதிகளில் ஒருவரான கருணா அம்மான் என அறியப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு பிரித்தானிய வெளியுறவு துறை அமைச்சு தடை விதித்திருந்தது.

பிரித்தானியா பொருளாதார தடை மற்றும் பயணத்தடை விதித்து 24 மணித்தியாலங்கள் கடந்த பின்னரும் கூட இலங்கையின் வெளியுறவு துறை அமைச்சோ அல்லது விசேடமாக இலங்கை அரசு சார்ந்து இருக்கக்கூடிய அமைச்சர்களோ எந்தவொரு நிலைப்பாடுகளையும் அறிவிக்கவில்லை.

எனினும், தென்னிலங்கையில் உள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முக்கியஸ்தர்கள் இது குறித்து கடுமையான எதிர்வினையாற்றி இருந்தார்கள்.

குறிப்பாக சரத் வீரசேகர, அன்று விடுதலைப்புலிகளுக்கு எதிரான தாக்குதல்களை பிரித்தானியா நிறுத்துமாறு கோரியிருந்த போதும் இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகள் இயக்கத்தை தாக்கியதன் விளைவாகத்தான் இன்று இந்த தடை இருப்பதாக அவர் குறிப்பிடுகின்றார்.

தடை விதித்த நால்வரில் சவேந்திரசில்வா முக்கியமானவராக கருதப்படுகின்றார்.

ஏனெனில் தையிட்டி விகாரை அமைப்பதில் முன்னின்று செயற்பட்டவராக இவர் காணப்படுகின்றார்.

யார் விகாரை அமைப்பதில் முன்னின்று செயற்படுகிறார்களோ அவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் பெரிதாக பார்க்கப்படுவார்கள்.

அதைப்போலவே இங்கும் மேற்குலகமோ அநுர அரசோ எந்த நடவடிக்கையையும் எடுத்தாலும் அவருக்கான ஆதரவுத்தளம் அதிகமாகவே இருக்கும்.

கோட்டாபய ராஜபக்சவை ஆட்சி மாற்றம் செய்த போதும் சவேந்திர சில்வா அமெரிக்காவினால் தடை செய்யப்பட்ட நிலையில் இருந்தார். ஆனால் தேவைக்கு அன்று அமெரிக்காவை வரை சவேந்திரசில்வாவை பயன்படுத்தி இருந்தது.

இவ்வாறாக சவேந்திர சில்வா மீது மேற்குலக நாடுகள் தடை விதித்துக் கொண்டிருக்கையில், அவருக்கான ஆதரவு சிங்கள் மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டிருக்கும்.

ஆதரவு அதிகரிக்கும் சூழலில் சவேந்திர சில்வா வரவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக களமிறக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் விரிவான விடயங்களை கீழுள்ள செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் காணலாம்….          

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

மேலும் செய்திகள்

அதிகம் படிக்கப்பட்டவை

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை அரசியல்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.

இலங்கை பொருளாதாரம்

முக்கிய செய்திகளை நொடிப்பொழுதில் எங்கள் செய்தி சேவையினூடாக உடனுக்குடன் அறிந்துகொள்ள இன்றே எமது குழுவில் இணைந்துகொள்ளுங்கள்.