சற்று முன்னர் பொலன்னறுவை- மன்னம்பிட்டியவில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணை
இது தொடர்பில் மன்னம்பிட்டி பொலிஸாரை தொடர்பு கொண்டு பேசிய போது, ஒருவர் நடந்து வந்து துப்பாக்கி சூட்டை நடத்தி விட்டு தப்பித்து ஓடியதாக பொலிஸாலர் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மனம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.